Monday, 19 December 2011

Aadhi Bhagavan Ena



ஆதி பகவன் என அவனியில் வந்துதித்த
சாயி பகவனை சரணடைவோம் சரணடைவோம்
ஆதி பகவன் என அவனியில் வந்துதித்த
சாயி பகவனை சரணடைவோம் சரணடைவோம்

பாடிப் பரவுவார்தம்மை தேடித் தெரிந்துகொண்டு
கூடிக்குலவி அவன் புகழ் இசைப்போம்  
பாடிப் பரவுவார்தம்மை தேடித் தெரிந்துகொண்டு
கூடிக்குலவி அவன் புகழ் இசைப்போம்  

ஆதி பகவன் என அவனியில் வந்துதித்த
சாயி பகவனை சரணடைவோம்
ஆதி பகவன் என அவனியில் வந்துதித்த
சாயி பகவனை சரணடைவோம்

தனக்கென எதைத்தான் தான் வைத்திருந்தான்
தனையண்டி வந்தவர்க்கு தருநிழலாய் இருந்தான்
நாளும் பயந்தே நடுங்கிய மாந்தர்க்கு
நானிருக்க பயமேன் நம்பியிரு என்றுரைத்தான்
நன்மையென்ன தீமையென்ன உன்னைவந்து என்னசெய்யும்
இன்பமென்ன துன்பமென்ன உன்னைவந்து என்னசெய்யும்
வானிருந்து வையகத்தை வாழவைக்க வந்தவனோ

ஆதி பகவன் என அவனியில் வந்துதித்த
சாயி பகவனை சரணடைவோம்
ஆதி பகவன் என அவனியில் வந்துதித்த
சாயி பகவனை சரணடைவோம் சரணடைவோம்


அவனுக்கு அன்னைதந்தை அதையார் அறிவாரோ
அன்னைதந்தையாயிருக்கும் அவனை யார் அறிவாரோ
அத்தனையும் உள்ள அவன்  பிச்சைக்கென்று வீதிவந்தான்
எத்தனையோ தந்துமனம் பித்தம்கொள்ளச்  செய்துவிட்டான்
வள்ளல் அவன் கோவில் விட்டு உள்ளம் எங்கு செல்லக்கூடும்
வெள்ளம் எனப் பொங்கும் அருள் என்னவென்று சொல்லக்கூடும்
வாழும்பயிர் வானம் நோக்க வான்மழையாய் வந்தவனோ

ஆதி பகவன் என அவனியில் வந்துதித்த
சாயி பகவனை சரணடைவோம் சரணடைவோம்
ஆதி பகவன் என அவனியில் வந்துதித்த
சாயி பகவனை சரணடைவோம்

பாடிப் பரவுவார்தம்மை தேடித் தெரிந்துகொண்டு
கூடிக்குலவி அவன் புகழ் இசைப்போம்  
பாடிப் பரவுவார்தம்மை தேடித் தெரிந்துகொண்டு
கூடிக்குலவி அவன் புகழ் இசைப்போம்

ஆதி பகவன் என அவனியில் வந்துதித்த
சாயி பகவனை சரணடைவோம்
ஆதி பகவன் என அவனியில் வந்துதித்த
சாயி பகவனை சரணடைவோம்

No comments:

Post a Comment